--- --:--:-- --

தடுப்பூசி உடைந்து குழந்தையின் உடலில் இருந்தது குறித்து விசாரணை

Capture

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் போடப்பட்ட தடுப்பூசி உடைந்து உடலிலேயே இருந்து தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழு நேரில் விசாரணை நடத்தியது. எம் எஸ் ஆர் புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் மலர்விழி தம்பதிக்கு கடந்த 21ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

 

தாயும் சேயும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தைக்கு தொடங்கி போடப்பட்ட தடுப்பூசியில் ஒரு பகுதி உடைந்து உடலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஊசியை கண்டறிந்து அகற்றியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். குழந்தையின் தாய் இதுதொடர்பாக மேட்டுபாளையம் தலைமை மருத்துவரிடம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

 

இதனிடையே குழந்தையின் உடலில் ஊசி இருந்தது குறித்து விளக்கமளிக்க சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான மருத்துவக் குழு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்தியது.

 

குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய இந்த குழு பாதிக்கப்பட்ட குழந்தையை நேரில் பார்த்து ஆய்வு செய்த சம்பவம் நிகழ்ந்தபோது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடம் தனித்தனியாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon