தகுந்த காரணங்களை கொண்டே நீதிபதிகள் பணியிட மாற்றம்: கொலிஜியம் விளக்கம்

நீதிபதிகளில் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் விளக்கமளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

 

நீதிபதிகள் எந்த காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேவைப்படும் பட்சத்தில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அதில் தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கொலிஜியம் தன் அறிக்கையில் கூறியுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் பல்வேறு நீதிபதிகளை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தது.

 

அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்ற படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றத்தை விரும்பாத தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தஹில்ரமாணி நீதிமன்றப் பணிகளை கவனிக்காமல் இருந்து வருகிறார். இதற்கிடையே தலைமை நீதிபதி தருகின்ற மாநிலத்தின் பணிவிடை மாற்றத்தை எதிர்த்து தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர்.


Leave a Reply