சந்திராயன்-2 நிலவில் கால்பதிக்கும் தருணத்தை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள் : பிரதமர் மோடி

சந்திராயன் விண்கலம் நிலவில் கால் பதிக்கும் தருணத்தை 130 கோடி இந்தியர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்த சந்திரயான்-2 விண்கலம் நாளை அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குகிறது.

 

இதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் கால்பதிக்கும் தருணத்தை 130 கோடி இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

அடுத்துவரும் சில மணிநேரங்களில் சந்திரயான் 2 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதும் நமது விண்வெளி வீரர்களின் திறமையை இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகம் வியப்புடன் பார்க்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Leave a Reply