--- --:--:-- --

தங்கம் வென்றார் துளசிமதி முருகேசன்!

2

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன் தங்கம் வென்று, அடுத்தடுத்த சில மணி நேரங்களில் 3 பதக்கங்களைப் பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 23 தங்கம், 30 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது.

 

 

குறிப்பாக நேற்று (அக். 22) மட்டும் இந்தியா ஏழு தங்கம் வென்றது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பதக்க வேட்டையைத் தொடங்கியது இந்தியா. தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இன்றைய வேட்டையைத் தொடங்கி வைத்தார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி விளையாடிய துளசிமதி சீனாவின் கியுக்சியா யாங்கை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார்.

 

மொத்தம் இரண்டு செட்கள் நடந்த போட்டியில் சீன வீராங்கனை Yang Qiuxia வுடன் 18-21, 11-21 என துளசிமதி போராடி தோல்வியுற்றார். தங்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவினாலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அடுத்த சில மணி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றார். பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் இணைந்து இந்தோனேசியாவின் லியானி ராத்ரி ஒக்டிலா மற்றும் ஹிக்மத் ரம்தானி ஆகியோரை எதிர்கொண்டனர்.

 

இதில், நிதேஷ், துளசிமதி முதல் சுற்றில் 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும், இந்தோனேசியாவின் லியானி, ரம்தானி ஜோடி மீண்டு வந்து இரண்டாவது சுற்றை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றியது. இறுதியாக, மூன்றாவது சுற்றில் 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இந்தோனேசிய ஜோடி தங்கப் பதக்கத்தை வெல்ல, நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஏற்கனவே, பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் மனாஸி ஜோஷியுடன் இணைந்து விளையாடிய துளசிமதி முருகேசன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.

 

 

அந்த இறுதிப் போட்டியும் இன்று நடைபெற்றது. அதில் மனாஸி ஜோஷி மற்றும் துளசிமதி இணைந்து சீனாவின் யாங் கியூக்ஸியா மற்றும் சியாவ் ஜுக்ஸியான் இணையை 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் துளசிமதி ஒரே நாளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon