கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கொடுமையாக கருத முடியாது !
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, இந்திய தண்டனை சட்டப்படி மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை எனக்கூறி மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் கணவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை, திருமணத்தை மீறிய உறவு இருந்ததை காவல்துறை நிரூபிக்கவில்லை எனக்கூறி கணவரை விடுதலை கீழமை நீதிமன்றம் செய்தது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




