மேலும் ஒரு ஐ‌ஏ‌எஸ் அதிகாரி ராஜினாமா!காரணம்

நாட்டின் அடிப்படை ஜனநாயக கட்டமைப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்படுவதாக கூறி கர்நாடகாவில் பணியாற்றிவந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக இருந்த சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பதவியில் இருந்து விலகுவது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்று கூறியிருக்கிறார்.

 

பன்முகத்தன்மை கொண்ட தமது ஜனநாயகத்தின் அடிப்படைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்படும் நிலையில் அரசுப் பணியாளர் ஆகத் தான் தொடர்வது முறையில்லை என்று தோன்றியதால் பதவி விலக முடிவு எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

எதிர்வரும் நாட்களில் நாட்டின் அடிப்படை இயல்பே பல்வேறு சவால்களை கொண்டுவரும் என்று தான் கருதுவதாகவும் சசிகாந்த் செந்தில் குறிப்பிட்டிருக்கிறார். எனவேதான் வழக்கம்போல பணியாற்ற முடியாது என்றும் இந்திய அரசு பணியிலிருந்து விலகிய மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பது சிறந்தது என்று தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

தமிழகத்தை சேர்ந்த செந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். கடந்த மாதம் காஷ்மீரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்த செந்தில் கோபிநாத் அதிகாரி பதவி விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு அதிகாரி பதவி விலகி இருக்கிறார்.


Leave a Reply