அங்கேரி பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பணம் கொடுக்கவில்லை என கூறிய பனியன் கம்பெனி மற்றும் அதன் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு பணம் கொடுத்துவிட்டு மற்றொரு குழுவிற்கு பணம் தராததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதல் குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.