மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு!
தேசத்தந்தை காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி நாடுதழுவிய பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாள் வரும் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு காந்தியின் 150 வது பிறந்த நாள் என்பதால் ஒரு வாரத்திற்கு அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய அளவில் காந்தியை போற்றும் வகையில் பாதயாத்திரையை ஒரு இயக்கமாக நடந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




