திருவாடானையில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சிக்கு 2018 – 19 ஆம் ஆண்டுக்குரிய வறட்சி நிவாரணத்தையும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையையும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், அதேபோல் 2017ஆம் 18 ஆம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்.. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.


2 thoughts on “திருவாடானையில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம்

  1. Pingback: Masum

Leave a Reply