ஊராட்சி மன்றமா? அரசியல் கட்சியின் அலுவலகமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் சக்கரகோட்டை ஊராட்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது.

 

கடந்த முறை இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்த இவர் இந்த அலுவலகத்தை கட்சி அலுவலகமாகவே பயண்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குறித்து சக்கரகோட்டை ஊராட்சி பகுதி மக்கள் கூறுகையில்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கட்சி அலுவலகமாக மாற்றி வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இதை  ஊராட்சி கிளார்க் கண்டுகொள்ளாமல், எந்த கவலையும் படாமல் தாங்கோண்டி தனமாக செயல்படுவது மன வேதனை அளிக்கிறது.

 

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்து, சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை மீட்டு தரவேண்டும். இதனைக் கண்டும் காணாததுபோல் இருந்த ஊராட்சி கிளர்க் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply