தன்னை பிக்பாசில் கொடுமைபடுத்தியதாக நடிகை மதுமிதா புகார்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது தன்னை கொடுமைப்படுத்தியதாக தனியார் தொலைக்காட்சி மீது நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார். ஒருகல்ஒருகண்ணாடி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஞ்சனா-2, விசுவாசம் போன்ற திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருப்பவர் நடிகை மதுமிதா.

 

இவர் தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார். சக போட்டியாளர்கள் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த மதுமிதா கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ஆவடி அருகே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலமாக புகார் நடித்திருக்கும் நடிகை மதுமிதா தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தன்னை கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார் .

 

அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நிலையின் வலுக்கட்டாயமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தன் மீது தவறான விமர்சனங்களை செய்யக் கூடாது என்றும் இதன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply