உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விலக்கிக் கொண்டால் விதிகளுக்குட்பட்டு சென்னையில் விளம்பர பதாகைகள் மற்றும் தட்டுகளை அமைக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விளம்பரப் பதாகைகள் மற்றும் தட்டிகளை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.
ஒரு சாலைக்கு நடுவே பதாகைகளை வைக்கக்கூடாது இடையே குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். விளம்பர பதாகையின் கீழ் அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதிக்கப்பட்ட அளவில் விவரம் எப்போது வரை அனுமதி உள்ளது, அச்சகத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
கால அவவிதிகளை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாநகராட்சியிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அச்சகங்கள் பதாகைகளை அச்சடித்துத் தர வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவில் பதாகைகளை அச்சடித்துக் கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதி இல்லாமல் பதாகைகளை எடுத்து தரக்கூடாது முடிவுற்ற உடன் மக்களுக்கு இடையூறு இன்றி பதாகைகளை வைத்தவரே அவற்றை அகற்ற வேண்டும்.
அனுமதியும் இல்லாமல் பதாகைகளை அச்சடித்து தரக்கூடாது. விதிகளை மீறும் அச்சகங்கள் மீது மூடி முத்திரையிடப்பட்ட மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.






