தமிழிசை சிறந்த ஆளுநராக பணியாற்றுவார் என பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் இந்த பதவி கிடைத்திருப்பதாகவும் மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார். கவர்னராக செய்யும் பணி தெலுங்கானாவில் தொடர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார். பதவியேற்புக்கு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டதன்படி 8-ம் தேதி ராஜ்பவனில் பதவி ஏற்கும்போது பிரேமலதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கவர்னர் என்பது மிகப் பெரிய அந்தஸ்து என்றும் அவர் புகழாரம் சூட்டினார் அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழருக்கு இந்த பதவி கிடைத்தது உண்மையில் வரவேற்பதாகவும் சிறந்த கவர்னராக அவர் செயலாற்றுவார் என  பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


Leave a Reply