திமுக விஜயை சந்தித்தாலும் சரி, அமெரிக்க அதிபரை சந்தித்தாலும் சரி! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

திமுகவில் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் நடிகர் விஜயை சந்தித்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார். தங்களை பொறுத்தவரையில் திமுக விஜய் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர் என்றால் ஏற்கனவே கூறியது போல 18 சதவிகிதத்திலிருந்து 47 ஆக மாறியதால் திமுகவில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அது ஏற்பட்டதை வேறு வகையில் சரி செய்வதற்கும், கட்சியை தலை நிமிர்த்தி வைத்தால் ஆட்சியை பிடிக்கலாம் எனவும் அந்த கண்ணோட்டத்தோடு நடிகர் விஜயை சந்தித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அவர் விஜய்யை சந்தித்தாலும் சரி அமெரிக்கரை சந்தித்தாலும் சரி தங்களை வீழ்த்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறியுள்ளார்.


Leave a Reply