--- --:--:-- --

தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு இன்று வெளியீடு!

Capture

அஸ்ஸாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசாமில் சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதாக அம்மாநில டி‌ஜி‌பி தெரிவித்துள்ளார்.

 

அங்கு ஏற்கனவே 167 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவலர்கள் இருக்கும் நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த மேலும் 51 கம்பெனி படைகளைத் மத்திய அரசு அனுப்பி வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார். மாநில காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அணிவகுப்புகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடுவதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார். அண்டை நாடுகளிலிருந்து குடியேறுவோர் அடையாளம் காணும் பொருட்டு அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட உள்ளது.

 

ஏற்கனவே வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியிட்ட போது விண்ணப்பித்திருந்த சுமார் 40 லட்சம் பெயர்கள் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இறுதிப் பட்டியல் தயாராகி வருகிறது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் புகார் அளித்ததற்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றத்தையும் அணுக உரிமையுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon