இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக கருதப்படுபவர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் தேசிய புள்ளியல் அலுவலகம் பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.8 விழுக்காடாக இருந்தது இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு என கூறப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு காரணிகளாக உள்ள கட்டுமானத் துறையின் வளர்ச்சி 9.7 விழுக்காட்டிலிருந்து 5.7 விழுக்காடாகவும், விவசாயத்துறையின் வளர்ச்சி 5.7 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடாகவும், குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக உற்பத்தித்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அது 12.1 விழுக்காட்டிலிருந்து 0.6 விழுக்காடாக சரிவடைந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் வைப்பதை தெளிவுபடுத்தி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேலை இழப்பு தொழில் துறை மூலம் கிராம பொருளாதார அறிவு போன்ற பிரச்சினைகளை மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். இனியாவது வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தாமல் உண்மையான பிரச்சினைகளை மத்திய அரசு கவனம் செலுத்துமா முகஸ்டாலின் வினவியுள்ளார்.