சந்திரனின் நிலவு சுற்றுவட்ட பாதை நான்காவது முறையாக வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 7 ஆம் நாள் நிலவில் இறங்குகிறது. சந்திராயன்-2 நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க இருக்கிறது. நேற்று முன்தினம் விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மூன்றாவது முறையாக வெற்றியாக மாற்றி வைக்கப்பட்டு தற்போது நான்காவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-2 விண்கலம் சென்றிருக்கிறது.
நான்காவது முறையாக அதனுடைய சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 164 கிலோ மீட்டருக்கு அருகில் நிலவின் அருகில் சென்று விட்டுள்ளது. அடுத்ததாக வரக்கூடிய ஒன்றாம் தேதி இதேபோல் இறங்கு வரிசையில் பூமியிலிருந்து அனுப்பும் போது அது ஏறுவரிசையில் சென்றிருக்கக்கூடிய நிலையில் அது இறங்கு வரிசையில் நிலவை நோக்கிய வரிசையில் அது சென்று கொண்டிருக்கிறது.