நாட்டின் பொருளாதாரத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் 27 பொதுத்துறை வங்கிகள் இனி 12 வங்கிகள் ஆக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என கூறினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஓரியண்டல் வங்கி யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என கூறினார் .இந்த மூன்று வகைகளும் 1.75 லட்சம் கோடி வர்த்தகம் செய்யும் எனவும் இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் கனரா வங்கி யுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டு நாட்டின் நான்காவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக மாற்றப்படும் என கூறினார். 15.20 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறினார். இந்தியன் வங்கி அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
யூனியன் ஆந்திரா கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டு நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியாக மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 27 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இரண்டு வகைகளாக மாற்றப்படும் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 8.5 லட்சம் கோடியிலிருந்து 7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக நிர்மலா கூறினார்.
மோசடிகளை தடுக்க ஸ்விஃப்ட் குறுந்தகவல்கள் பங்குகளையும் முக்கிய அமைப்புகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 250 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் வங்கிக் கடன்கள் சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். எட்டு பொதுத்துறை வங்கிகள் கடன் வட்டி தொகையை குறைந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.