தொழிற்சாலை கழிவுகளால் பாழகி போகும் நொய்யல் ஆறு!

திருப்பூரில் ஜீவாதாரமாக விளங்கும் நொய்யல் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்த நிலையில், இதில் அடித்து வரப்பட்ட நெகிழிகள் ஆற்றில் மலைபோல் குவிந்துள்ளன. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல சிற்றோடைகள் இணைந்து நொய்யல் நதி உருவாகிறது.

 

800 கிலோமீட்டர் தொலைவிற்கு கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக பயணித்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நொய்யலை நம்பி விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்த நிலையில், தொழிற்சாலை கழிவுகளும் சாக்கடைகளும் பாழ் ஆகிவிட்டது.

 

இந்நிலையில் அண்மையில் பருவமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், தற்போது வெள்ளம் வடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது நொய்யல். ஆனால் ஆறு முழுவதும் .நெகிழிகளாக காட்சியளிக்கின்றது.

 

நெகிழி இல்லா தமிழ்நாடு என்ற முழக்கங்கள் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். உண்மை நிலை என்னவென்று அதற்கு உதாரணமாக காட்சியளிக்கிறது. நொய்யல் ஆறு நெகிழிகள் இடமிருந்து நொய்யலை காக்க போவது யார் என்று கவலையுடன் காத்திருக்கின்றனர் அந்த ஆற்றலை நேசிக்கும் மக்கள்.


Leave a Reply