சுற்று சூழல் மாசுபாடு இல்லாத தினமாக இன்று அனுசரிக்கப்பட்டு கோவை கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.கோவை கிருஷ்ணா கல்லூரியில் சமூக நோக்கத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தினமாக அனுசரிக்கப்பட்டு நற்செயல்களை செய்து வருகின்றனர்.அதே போல் ஆகஸ்ட் 27 ஆம் தேதியை மாசு இல்லாத தினமாக இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுற்று சூழல் நட்பு முறைகளை வலியுறுத்தி பசுமை இந்தியா இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் சைக்கிள் மற்றும் நடை பயணமாக கல்லூரிக்கு வருகின்றனர்.
இதன் மூலம் மாசுபாடு காரணமாக ஓசோன் அடுக்கை குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் மாசுபாடு இல்லாத தினமாக அனுசரிசிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.இதில் கல்லூரி அறங்காவலர் மலர்விழி மற்றும் நிர்வாக அலுவலர் சுந்தரராமன்,முதல்வர் பேபி ஷகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.