கீழடியில் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தொன்மையான பொருள்கள்!

மதுரை அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் செவ்வக வடிவ தண்ணீர் தொட்டி மனித முகம் விலங்கு முகம் இடம்பெற்றுள்ள சுடுமண் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழங்கால தமிழர் நாகரிகத்தை கண்டு பிடிக்கும் முயற்சியாக கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் ஐந்தாம் கட்ட அகழ்வராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது.

 

தென்னந்தோப்பில் மண்ணை தோண்டி நடத்தப்பட்டுவரும் அகழாய்வில் ஏற்கனவே அயல்நாட்டு மகளிரணி ஆபரணங்களும், கல்மணிகள், சங்கு வளையல்கள் தூது பவள அணிகலன்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது 5 அடி நீளமுள்ள செவ்வக வடிவிலான தண்ணீர் தொட்டி தண்ணீர் வாய்க்காலில் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

 

இதுதவிர சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன மனித முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரட்டைச் சுவர்., ஒரே கிணறுகள் நூற்றுக்கணக்கான விதவிதமான 150க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply