நேபாளத்தில் பேரழிவுக்குக் காரணமான பனிப்பாறை உடைந்தது எப்படி
முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் நேபாளத்தில் பேரழிவுக்குக் காரணமான பனிப்பாறை எவ்வாறு உடைந்தது என்பதைக் காட்டும் அரிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை பனிப்பாறை சரிந்ததில் பாறைகள், பனி, சேறு மற்றும் இடிபாடுகளுடன் வெள்ளம் பெருக்கெடுத்து, திபெத்–நேபாள எல்லையில் உள்ள முக்கியமான எல்லை வளாகத்தை அடித்துச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 50-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சேறு மற்றும் பாறைகளால் சூழப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேபாளத்தில் பேரழிவுக்குக் காரணமான பனிப்பாறை எவ்வாறு உடைந்தது என்பதைக் காட்டும் அரிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ’தி நியூயார்க் போஸ்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நேபாளத்தில் இமயமலையில் உள்ள லாங்டாங் லிரங் சிகரத்தின் உச்சிப்பகுதியில் இருந்து ராட்சத பனிப்பாறைகள் உடைந்து மலையிலிருந்து கீழே சரிந்து விழுகின்றன. நேபாளப் பகுதியில் சரிந்த இந்த பனிப்பாறைகள், இறுதியில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏரிகளாக உருவானதையும், பேரழிவை ஏற்படுத்திய வெள்ளமாக மாறியதையும் அந்த வீடியோ காட்டுகிறது. இந்த காட்சியைச் சீன சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படம்பிடித்துள்ளார்.
மற்றொரு மலையேற்ற வீரர் பதிவு செய்துள்ள வீடியோவில், பனிப்பாறை உடைந்ததைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் அடர்ந்த தூசி மண்டலமும் மேகங்களும் சூழ்ந்த காட்சி பதிவாகியுள்ளது. பனிக்கட்டிகள், பாறைகள் மற்றும் இடிபாடுகள் பள்ளத்தாக்கில் விழுவதற்கு முன், மலையில் பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும் மலையேற்ற வீரர்கள் தெரிவித்துள்ளனர்.ஈடேறாது – நயினார் நாகேந்திரன்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




