சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்றதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா புரத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனது மகள்களுடன் ஆண்டர்சன் தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் ஷர்மிளாவின் கைப்பையை பறித்து சென்றுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் ஆட்டோவை சுற்றி வளைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், அதில் இருந்த பெண்ணை பிடித்த பொதுமக்கள் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
புளியந்தோப்பை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் அர்ச்சனாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
ரூ.500 கோடி முதலீடு: CM முன்னிலையில் ஒப்பந்தம்..!
திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!
அங்கன்வாடியில் சமைத்த உணவில் பல்லி..6 குழந்தைகளுக்கு ஒவ்வாமை..!
200 பேரின் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த சாம்சங் நிறுவனம்..!
கர்நாடகாவில் 144 தடை உத்தரவு..இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்..!
வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!