--- --:--:-- --

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு..!

3

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி தற்போது ரூ.44-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38-லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.

 

 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று உரையாற்றினார். அப்போது, மாநில அரசின் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை மேலும் 3 ரூபாயை உயர்த்துவதாக அறிவித்தார். இதையடுத்து ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

கால்நடைகளுக்கான தீவனம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு தவணைகளில் ஆவின் பால் கொள்முதல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.60 கோடி கூடுதல் செலவாகும். இதையடுத்து ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon