--- --:--:-- --

காஷ்மீருக்குச் சென்ற எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்

download (8)

காஷ்மீரில் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.டில்லியிலிருந்து எதிர்க்கட்சிகளின் உடைய 10 கட்சிகளை சார்ந்த தலைவர்கள் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றனர்.

 

குறிப்பாக ஸ்ரீநகரில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் ,ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக எதிர்கட்சிகள் கொண்ட தலைவர்கள் குழுவானது இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு ஸ்ரீநகர் விமான நிலையத்தை சென்றடைந்தது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் வர வேண்டாம், என்ற ஒரு வேண்டுகோளை ஸ்ரீநகரின் அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையில் ராகுல்காந்தி கிட்டத்தட்ட பன்னிரெண்டு தலைவர்கள் இன்று காலை டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.

 

குலாம்நபி ஆசாத், வேணுகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக சார்பில் திருச்சி சிவா விமானம் மூலம் சென்றனர். ஆனால் சீனாவின் விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். காரணம் ஏனென்றால் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி அவர்கள் யாரையும் ஸ்ரீநகருக்கு அனுமதிக்கவில்லை என ஸ்ரீநகர் இந்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon