தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடைய பிறந்தநாள் நடந்து கொண்டாடப்பட இருக்கிறது.
இதனையொட்டி இன்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு அவர் வழக்கமாக பிறந்தநாளன்று நிதி ஒதுக்குவது வழக்கம்.
தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அவரது கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க கூடிய நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.