திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையில் நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் காயமடைந்தனர். சுந்தரம் என்பவர் தென்கரை வாசலில் பறவைகளை வேட்டையாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியை கயிற்றினால் கட்டியபடி சென்றுள்ளார். திடீரென கயிறு அறுந்ததால் துப்பாக்கி சாலையில் விழுந்தது. அப்போது வெடிமருந்து நிறுவப்பட்ட காரணத்தால் நாடு துப்பாக்கி வெடித்தது.
அந்த நேரத்தில் சாலையில் பின்னால் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த தென்புற வாசலை சேர்ந்த சகோதரர்களான பாலமுருகன், செல்வம் ஆகியோர் மீது வெடிமருந்து பாய்ந்ததால் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.