திருவாடானையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

திருவாடானையில் வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை திருவாடானை தென் கிழக்கு தெருவில் திருவாடானை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பம் கைது செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், 2 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முன்னாள் மத்திய அமைச்சரை தீவிரவாதியை கைது செய்வது போல் வீட்டின் சுவர் ஏறிகுதித்து ஏன் அவசர அவசரமாக கைது செய்ய வேண்டும். இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பதும் பொய்யான வழக்கு என்பது நீதிமன்ற விசாரணையில் மக்களுக்கும் நாட்டுக்கும் விரைவில் தெரிய வரும் என்று பேசி, மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply