ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் – காங்கிரஸ் அதிரடி
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்படும் வரை நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தங்களது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையிலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஞானேஷ் குமார் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை தங்களது எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




