27ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், வரும் 27ஆம் தேதி காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக மாறி ஆந்திர கடலோரப் பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




