ஒற்றை கையால் நீச்சல் அடித்து சாதனை!

நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக் கொண்டு மற்றொரு கையில் நீச்சலடித்து சாதனை செய்துள்ளார். மீனவ கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்ற கல்லூரி மாணவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் அவரது முந்தையை சாதனையை முறியடிக்கும் விதமாக தனது ஒரு கையில் இரும்பு சங்கிலியை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை வலது கையை மட்டுமே பயன்படுத்தி நீச்சலடித்து சென்றுள்ளார். மாணவனின் சாதனை முயற்சியை ஏராளமானோர் கைதட்டி பாராட்டியுள்ளனர்.


Leave a Reply