அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக வேலூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply