அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் 2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என்றும், ஜூலை 4-ம் தேதி நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும், தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 2020 மார்ச் 27ஆம் தேதியன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது.