கோவையில் முதன் முறையாக நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு என்ற ஆலோசனை கூட்டம் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்றது.பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 110கிளைகள் சார்பில் நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு என்ற ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.
கோவையில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் வங்கி கிளைகளின் சுய ஆய்வு மற்றும் பிற்கால திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது . கடன்களை அதிகப்படுத்தும் வழிமுறைகளை கண்டறிதல் , தகவல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்புது யுக்திகளை உருவாக்குதல்,புள்ளி விபரங்கள் குறித்தும் மூத்த குடிமக்கள் , விவசாயிகள் , சிறுதொழில் முனைவோர்கள் , தொழில் அதிபர்கள் , இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாகவும் இதில் விவாதிக்கப்பட்டது.
பின்னர்,இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல மேலாளர் கீதா நாகராஜன்,டிஜிட்டல் பணப்பட்டுவாடா , பொதுத்துறை வங்கிகளில் மேலாண்மை,சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்,சில்லரை வணிகம்,விவசாயம் , ஏற்றுமதி கடன் மற்றும் நிதி சம்பந்தமான வசதியை உருவாக்குதல் ,ஆகிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,இதனால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பலவகைகளில் கடன் வழங்குதல்,டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பான பண பரிமாற்றம்,தூய்மை இந்தியா, எல்லோருக்கும் நிதி சேவை,பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளில் வங்கிகளின் பங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர்கள் கௌரி சங்கர் ராவ்,பிச்சை ரத்தினம்,சுப்ரமணியம் உட்பட வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.