--- --:--:-- --

நவீன வகை ஆடைகளை அணிந்து ” கேட் வாக் ” வந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள்

2

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல்வேறுவிதமான நவீன வகை ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள். கல்லூரி மாணவிகள் மற்றும் நவீன விரும்பிகளிடையே ஆடை அலங்கார அணிவகுப்பை கொண்டு சேர்க்கும் விதமாக கோவையில் முதன் முறையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. பெங்களூரை சேர்ந்த ஃபேசன் பிளேம்ஸ் சார்பாக நடைபெற்றது.

இதில் BONAFIDE FASHION எனும் தலைப்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் வடிவமைத்த ஆடை டிசைனை அணிந்து ஒய்யார நடை நடந்தது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.

 

இதில் திருமதி யுனிவர்ஸ்-காயத்ரி நடராஜன், வி.ஜே கல்யாணி,ஷான் எம்.ஜே ,ஜோதிஷ் நாயர்,ஷெரிப் அஸ்மத,மற்றும் பிரபல நடிகை ஸ்ருதி ஓஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ் மற்றும் ஜின்சி பேசுகையில்,கர்நாடகாவில் துவங்கி கேரளாவில் சமீபத்தில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஓடும் படகில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதாகவும் தற்போது கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon