இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாள் மட்டும் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியக் கழகம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் ஆங்காங்கே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள், பட்டிமன்றங்கள், மாட்டு வண்டி பந்தயங்கள், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாள் மட்டும் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நயினார்கோவில் ஒன்றியக் கழகம் சார்பில் வடநாடு மஞ்சு விரட்டு போட்டிகள் நயினார்கோவிலில் நடைபெற்றது. நயினார்கோவில் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் T.சக்தி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்கண்ட போட்டிகளுக்கு இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மஞ்சு விரட்டில் பங்குபெற்ற காளைகளுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.போட்டியில் கலந்துகொண்ட காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இடையிடையே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் சொற்பொழிவும் நடைபெற்றது.
மேற்கண்ட நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலைஞரின் புகழையும் அவர் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திலகர் நன்றி கூறினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திசைவீரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், பரமக்குடி சண்சம்பத்குமார், கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், மனோகரன் சேம்பர் முருகேசன், பரமக்குடி முன்னாள் துணை சேர்மன் கிருஷ்ணமூர்த்தி,முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்திரசேகர், கொல்லங்குளம் காசி, மண்டலமாணிக்கம் சுபஸ்ரீ மணிகண்டன், RS.மங்களம் மோகன், நயினார் கோவில் நாகநாதன்,அக்கிரமேசி முருகேசன், தொமுச அரசுமணி, புலிகேசவன், வாசு, அண்ணாதுரை ஊராட்சி கழக செயலாளர்கள் பூமிநாதன், முதுகணபதி, சாத்தையா, விசுவநாதன், சேகர், பாலா, பாலச்சந்திரன், சுப்பிரமணியன், நடராஜன், மீரா, சந்திரசேகர், கோபால், ராஜு, சுந்தரராஜன், பாண்டியன், கார்மேகம், வெள்ளைச்சாமி, வெங்கடேஸ்வரன், ராமநாதன், கந்தசாமி, அ.சுப்பிரமணியன், நாகலிங்கம், உதயசூரியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.