இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்ககூடாது : எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை

இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்ககூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின்னர் அவர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றார்.

 

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், ‘இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைக் திணிக்கக்கூடாது. இந்தி திணிப்பிற்கு எதிராக போராடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

 

மேலும் கங்கை சீரமைப்பு திட்டம் போல் காவிரி ஆற்றை சீரமைக்க ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தினை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதை போல் நீர் மிகை மாநிலமாக விரைவில் உருவாகும்.

 

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.


Leave a Reply