மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு விருது

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் தமிழ் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. திருநங்கை ஷில்பாவாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், சிறந்த இயக்குநராக தியாகராஜன் குமாரராஜாவும் பரிசுகளை வென்றுள்ளனர்.

 

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியா மற்றும் துணைக் கண்டம் முழுவதுமிருந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 22க்கும் மேற்பட்ட மொழிகளில் திரையிடப்படும்.

 

இந்த விழாவுக்கு விஜய் சேதுபதி, ஷாருக் கான், காயத்ரி ஷங்கர், தபு, கரண் ஜோகர், அர்ஜுன் கபூர், ஸ்ரீராம் ராகவன், ரீமா தாஸ் மற்றும் ஜோயா அக்ஹட்டார் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தமிழ் மொழி திரைப்படமான விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும், இந்தி மொழி திரைப்படங்களான கல்லி பாய், பாதாய் ஹோ மற்றும் சுய் தாகா போன்ற திரைப்படங்களும் பரிந்துரைக்கப்பட்டன.

இதில் சிறந்த படத்திற்கான விருது, தமிழ் திரைப்படமான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது, இந்தப் படத்தில் திருநங்கை ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த இயக்குநர் விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவுக்கும் கிடைத்துள்ளது.

 

பிரபல இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மேடையில் பேசுகையில், இந்திய திரைப்படமான சூப்பர் டீலக்ஸ், அந்தாதுன் மற்றும் கல்லி பாய் இந்த மூன்று திரைப்படங்களின் கதை கருவை கூறுவதற்கு ஒரு தைரியத்தையும் மாற்று முகத்தையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

 

இந்திய சினிமாவைப் பார்க்கும் முறையையும், உலகம் முழுவதும் எவ்வாறு பயணித்தன என்பதையும் கூறுகிறது. இவை அனைத்தும் புலம் பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள சர்வதேச பார்வையாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன, இது இந்திய சினிமாவை மிகவும் பெருமைப்படுத்துகிறது என்று கூறினார்.


Leave a Reply