ஆறு வயது குழந்தையின் தாய் திருநம்பியுடன் கை கோர்த்த பெண் ! இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரிடம் தஞ்சம் !!

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர்கள் சுகன்யா, எப்ஸியா. இவர்கள் மதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2007ல் 10 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். இதனால் இருவரும் நெருங்கிய தோழிகளாகினர்.  இருவரின் நெருக்கத்தை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் 2012ல் இராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

 

இவர்களுக்கு சக்தி என்ற ஆறு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுகன்யாவும், எப்ஸியாவும் மதுரையில் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும் நட்பை தொடர விரும்பினர். இதனையடுத்து எப்ஸியா தனது பெயரை ஜெய்ஸன் ஜோஸ்வா என்ற பெயருடன் திருநம்பியாக தன்னை மாற்றிக் கொண்டார்.

இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து, சுகன்யா மகள் சக்தியை தங்களுடன் ஒப்படைக்குமாறு இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் காவல்துறையினர் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று கொள்ளுமாறு போலீசார் இன்று அறிவுறுத்தினர்.


Leave a Reply