இந்தியாவை சேர்ந்தவர், சிவானந்த் மஹராஜ். இவர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில், சொந்தமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். அமெரிக்க அரசு ஊழியர்களின், ஓய்வூதியம் மற்றும் சுகாதார அதிகாரியுடன் இணைந்து, செய்யாத பணிகளுக்கு, போலியாக ரசீதுகள் கொடுத்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக, சிவானந்த் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. வரும் டிசம்பரில், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிவானந்துக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.