திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

Publish by: --- Photo :


திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை சேர்ந்த செல்வம்(29) இவர் கடந்த 15.04.2019ம் தேதி உடல்நிலை சரியில்லாத நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, அரசுமருத்துவமனையில் நோயளி ஒருவர் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

 

இதனைப்பார்த்தடூவீலரின் உரிமையாளர் கூச்சலிட்டதை தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலிருந்தவர்கள் டூவீலரை எடுத்துச் சென்றவரை துரத்திப்பிடித்து, திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

 

இதனைஅடுத்து வழக்குப்திவு செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் பல இடங்களில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

 

இறுதிகட்டவிசாரனை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளி செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். பின்னர் குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Reply