குப்பைத்தொட்டியில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு புதிய முயற்சி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குப்பைத்தொட்டியில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு, சிறுவர்களுக்கு செயற்கை கைக்கால்களை உருவாக்கி வருகிறது.ஆஸ்திரேலியாவில் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், குப்பை கிடங்கு மற்றும் குப்பை தொட்டிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் மூடிகளை சேகரிக்கிறது.

 

பின்னர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு, செயற்கை கை மற்றும் கால்கள் தேவைப்படும் சிறுவர்களுக்கு அவர்கள் விரும்பும் நிறம் மற்றும் வடிவில் செயற்கை உறுப்புகளை செய்து கொடுக்கிறது. நிறுவனத்தின் இந்த புதுமை தொழிலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீன் டீர் என்பவர், குப்பையில் வீசப்படும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுசூழல் மட்டுமல்லாது சிறுவர்களும் பயனடைவதாக தெரிவிக்கிறார்.

மேலும் பிளாஸ்டிக் செயற்கை கைகள் உதவியுடன், ஊனமுற்ற சிறுவர்களால் அவர்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களை செய்ய முடிவதுடன், மனதளவிலும் நல்ல முன்னேற்றம் அடைவதாக தெரிவிக்கிறார்.


Leave a Reply