--- --:--:-- --

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5 – பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

download (3)

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மையம் வேலூர் நேதாஜி ஸ்டேடியம் காவலர் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இன்று காலை 10.00 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் 1,118 காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை மாலை 05.00 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பதிவான வாக்குகள் ஆகஸ்ட் மாதம் 09- ஆம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon