கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – அகில இந்திய கத்தோலிக்க சங்கம் கோரிக்கை

சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழ் மாநில பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழ் மாநில நூற்றாண்டு விழா கோவை மறைமாவட்டத்தில் உள்ள தூய மைக்கேல் பேராலய வளாகத்தில் உள்ள ஜீவஜோதி அரங்கில் நடைபெற்றது.

அகில இந்திய கத்தோலிக்க சங்க தமிழ் மாநிலத் தலைவர் அருள் தாஸ் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மதுரை, கோவை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் அரசியல் பொருளாதாரம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து தமிழக அரசால் கிறிஸ்தவ மகளிருக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் சலுகைகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் அருள்தாஸ் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கென தனி பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கிறிஸ்தவ சிறிபான்மையினருக்கு ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.விழாவில் கத்தோலிக்க சங்க மகளிர் மற்றும் கோவை மறை மாவட்ட பொதுசெயலாளர் லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply