வெஸ்ட் இண்டீஸ் தொடர் : இந்திய அணி 21 இல் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி வரும் ஞாயிற்றுகிழமை தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

 

இந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமயில் இன்று கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்தியா அணி வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்தத் அணி தேர்வில் தேர்வு குழுவினர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதம் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியை சார்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தத் தொடரில் முக்கிய வீரர்களான கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 3 தேதி முதல் டி20 போட்டியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் தொடரும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply