இந்திய அணியில் முக்கிய மாற்றம்..!

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை கொழும்புவில் நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 7 போட்டிகளில் இந்தியாவும் ஒரே போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 2007-ஆம் ஆண்டு ‘பௌல்-அவுட்’ வெற்றியும் அடங்கும்.

இலங்கை போட்டியிலும், இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பலமே குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்திதான். கொழும்புவின் மெதுவான ஆடுகளத்தில் இவர்களின் ‘மிஸ்டரி’ சுழலை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு கடினம்.

சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 தரவரிசையில் முன்னிலையில் இருப்பதோடு, மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அடிக்கும் திறன் கொண்டவர். திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விக்கெட்டுகள் சரிந்தால் ஆட்டத்தை மீட்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பியுள்ளது.

பும்ராவைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஓபனிங்கில் முக்கிய மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்கலாம். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் ஷர்மா, இந்தப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் ஷர்மா அணிக்கு திரும்பினால் சஞ்சு சாம்சன் பெஞ்சில் உட்கார வைக்கப்படலாம். நமீபியா அணிக்கு எதிராக இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு பதில் அபிஷேக் சர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகவே உள்ளது.