பெண்களுக்கான கைவினை பொருட்கள் கண்காட்சி கோவையில் துவங்கியது

கோவையில் கோ கிளாம் ஷாப்பிங்கின் ஆடி சிறப்பு விற்பனை கண்காட்சி இன்று துவங்கியது. பெண்களுக்கான கண்காட்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

 

கோவையிலுள்ள கோ கிளாம் ஷாப்பிங் எனும் தனியார் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பெண்களுக்கான கைவினை பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஆடி மாத சிறப்பு விற்பனை கண்காட்சி கோவை அவினாசி சாலையிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி நடைபெற்றுவருகிறது.

இன்றிலிருந்து 3நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.பெண்களுக்கென பிரத்யேகமாக துவங்கியுள்ள இக்கண்காட்சியில் பெண்களுக்கான பல்வேறு வகை ஆடைகள் மற்றும் அணிகலன்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளதுடன் தள்ளுபடி விலையில் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பெண்களுக்கான சிகை, அலங்கார பொருட்கள்,முக அலங்கார பொருட்கள் ,வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த அலங்கார பொருட்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

 

முன்னதாக கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த சிறப்பு விருந்தினர்கள் கண்காட்சியை கண்டுகளித்ததுடன் பொருட்களின் விற்பனையையும் குவக்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பல லட்சம் ரூபாய் விற்பனை எதிர்பார்ப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply