விமானத்தை விட அதிக வேகத்தில் பயணிக்க கூடிய தொழில்நுட்பம்

ஹைப்பர் லுக் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில், விமான போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பமே ஹைப்பர் லுப். கேப்சுய்ல் போன்ற குறைந்த காற்றழுத்தம் கொண்ட ஸ்டீல் குழாயில் காந்த விசையை பயன்படுத்தி ரயில் போன்று இயக்கப்படும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடங்கியவர் எலான் மஸ்க் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் முன் மொழிந்தவர்.

 

எலான் மஸ்க் நிறுவனம் மட்டும் இன்றி வெர்ஜின் ஹைப்பர் லுப் கனடாவை சேர்ந்த நிறுவனங்களும் இந்த திட்டத்திற்காக அதிக பணங்களை முதலீடு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. விமான கட்டணத்தை விட குறைந்த செலவில் விமானத்தை விட அதிக வேகத்தில் ஹைப்பர் லுப்பில் பயணிக்க முடியும் என்பதுடன் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த போக்குவரத்து உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

2023 ஆம் ஆண்டில் சான்றிதழ் பெற்று 2029 ஆம் ஆண்டில் ஹைப்பர் லுப் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று வெர்ஜின் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இந்தியாவில், மும்பை , பூனே இடையே ஹைப்பர் லுப்பை செயல்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டம் இட்டு உள்ளது. 2030 ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply