30 ஆண்டுகளில் 5 ஆயிரம் பாம்புகளை பிடித்த சீர்காழியின் பாம்பு மனிதர்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.ஆனால் 5,000 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு இருக்கிறார் சீர்காழியை சேர்ந்த ஒருவர்.கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கழுதை விரியன்,நல்ல பாம்பு,கொம்பேறி மூக்கன், கருநாகம் என எதுவாக இருந்தாலும் பாண்டியன் கையில் பச்சை குழந்தை போல தான். சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார்,வைத்தீஸ்வரன் கோவில், திருவெங்காடு போன்ற பகுதிகளில் வீடு. தோட்டம் என எங்கு பாம்பை பார்த்தாலும் உடனே சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தான் தகவல் போகும்.

 

அவர் வந்து பாம்பை நாசுக்காக பிடித்து பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுவிடுவார். சிறுவயதில் பாம்பை பார்த்து பயந்த நிலையில் பாம்புகளை நட்பாக்கி கொள்ளும் வகையில் அவற்றை பிடிக்க ஆரம்பித்த பாண்டியன் இப்போது பாம்பு மனிதராகவே அறியப்படுகிறார். பாம்புகளை பிடிக்கும் பொது அவற்றுக்கு மருந்திட்டு குணப்படுத்திய பின்பு தான் வனப்பகுதியில் கொண்டு விடுவார். இவரது வழியில் இவரது மகனும் பாம்பு பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Leave a Reply