திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து கிராம மக்கள் நூதன போராட்டம்

திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூசைசெய்து கிராம பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

 

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து இரவு தங்கி சாமி கும்பிட்டு செல்கின்றனர்.இந்த ஊரில் 800 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு திருவாடானையில் இருந்து ஆதியூர் வழியாக 50 ஆண்டுகளுக்கு முன்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

 

பெரும்பாலும் கண்மாய்கள் வழியாக மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளதால் அடிக்கடி மின் பழுது ஏற்படுகிறது இதை சரி செய்ய மின் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் மின்சாரம் தடை ஏற்படுகிறது இதனால் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து உதை மின் திட்டத்தில் கீழ் மாற்றுவழி பாதையில் மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 30 மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினார் பின்னர் அப்படியே பணிகளை கிடப்பில் போட்டு விட்டனர்.இத்திட்டத்தை முடிக்க வலியுறுத்தி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திருவெற்றியூர் கிராம இளைஞர்களும் பொதுமக்களும் மின்வினியோகம் இல்லாத காட்சிப் பொருளாய் நிற்கும் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

 

இதுகுறித்து திருவொற்றியூரைச் சேர்ந்த மணிகண்ட சிவம் கவாஸ்கர் ஆகியோர் கூறுகையில் பிரசித்தி பெற்ற கோயில் ஸ்தலம் உள்ளது. இந்த ஊருக்கு கண்மாய் பகுதிகளில் மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளதால் மின் பழுது ஏற்படும் போது சரி செய்ய காலதாமதம் ஏற்படுகிறது.எனவே மாற்றுப்பாதையில் கிராம மக்கள் கோரிக்கை வைத்ததை யொட்டி வீர சங்கிலி மட்டத்திலிருந்து உதய் மின் திட்டத்தில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 30 மின்கம்பங்களை ஊற்றிவிட்டு இந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தொடர்ந்து மூன்று நாட்கள் மின்வினியோகம் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டோம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு தங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மின் தடை ஏற்படும் போது குழந்தைகளும் பெண்களும் ஒருவித அச்சத்துடன்தான் கோயிலில் தங்கியுள்ளனர்.

 

எனவே விரைவில் உதை மின் திட்டத்தை நிறைவேற்றி மின்சாரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இந்த நூதன போராட்டத்தை நடத்தி உள்ளோம் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த பணியை எங்களுக்கு முடித்து கொடுக்காவிட்டால் ராமநாதபுரத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.


Leave a Reply